Maalaimalar
முதல் நாள், கொடியேற்றத்தை அடுத்து மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா.
இரண்டாம் நாள், அன்னை மீனாட்சி கலைமகளின் அம்சமாக அன்ன வாகனத்தில் காட்சி தருகிறார்.
வேண்டுவோருக்கு வாரி வழங்கும் தங்கக் காமதேனு வாகனத்தில் அம்மன் மூன்றாம் நாள் உலா.
நான்காம் நாள், கம்பீரமான தோற்றத்தில் யானை வாகனத்தில் அன்னை எழுந்தருளுகிறார்.
ஐந்தாம் நாள் அன்னை மீனாட்சி தேவியாக ரிஷப வாகனத்தில் பவனி வருகிறார்.
ஆறாம் நாள் இந்த விழாவின் மிக முக்கிய நாளாகும். அன்று இரவு அம்மன் மிகவும் எழிலார்ந்த வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.