திருமணத்திற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்

Maalaimalar

நிதி மற்றும் செலவுகள்

இருவரின் வருமானம், சேமிப்பு, கடன்கள் மற்றும் எதிர்கால முதலீடுகள் குறித்து வெளிப்படையாகப் பேசுங்கள். பணம் தொடர்பான தெளிவு பல பிரச்சனைகளைத் தவிர்க்கும்.

தொழில் மற்றும் எதிர்கால இலக்குகள்

திருமணத்திற்குப் பிறகு வேலை, மேற்படிப்பு அல்லது வெளிநாடு செல்லும் திட்டங்கள் உள்ளதா என்பதை முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுங்கள்.

குடும்பம் மற்றும் பொறுப்புகள்

இரு வீட்டாரின் எதிர்பார்ப்புகள், பெற்றோரை கவனித்துக் கொள்ளும் விதம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்து ஆரோக்கியமாக விவாதிக்கவும்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம்

எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், எத்தனை குழந்தைகள் வேண்டும் என்பதில் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம்

பரம்பரை நோய்கள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மன அழுத்தம் குறித்த விஷயங்களை மறைக்காமல் பகிர்ந்து கொள்வது நம்பிக்கையை அதிகரிக்கும்.

கருத்து வேறுபாடுகளைக் கையாளுதல்

கோபம் வரும்போது எப்படி நடந்துகொள்வீர்கள், பிரச்சனைகளை எவ்வாறு பேசித் தீர்ப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். விட்டுக்கொடுத்துப் போவது அவசியம்.

தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் நேரம்

திருமணத்திற்குப் பிறகும் அவரவர் நண்பர்கள், பொழுதுபோக்குகள் மற்றும் தனிப்பட்ட நேரத்திற்கு மதிப்பளிப்பதை உறுதி செய்யுங்கள்.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்