உலகின் விலை உயர்ந்த 6 உணவுகள்

Maalaimalar

குங்குமப்பூ

உலகின் மிகவும் விலையுயர்ந்த பொருளான குங்குமப்பூ, கையால் அறுவடை செய்யப்படுகிறது. சில கிராம் குங்குமப்பூ ஆயிரக்கணக்கான விலையில் விற்கப்படுகிறது.

கோபி லுவாக் காபி

இது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபியாகக் கருதப்படுகிறது. ஒரு கப் கோபி லுவாக் காபியின் விலை சுமார் 3,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை இருக்கும்.

வெள்ளை ஆல்பா ட்ரஃபில்ஸ்

இது மண்ணுக்குள் வளரும் ஒரு வகை காளான். உலகில் மிகவும் விலை உயர்ந்த உணவுகளில் இதுவும் ஒன்று. ட்ரஃபிளை தேடி பிடிப்பது மிகவும் கடினம். அதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களின் உதவியுடன் இவை கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு கிலோ ட்ரஃபிளின் விலை ரூ.5,50,000 ஆயிரம் விற்கப்படுகிறது.

அல்மாஸ் கேவியர்

இது அரிதான பெலுகா ஸ்டர்ஜன் என்ற மீனின் முட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவாகும். லண்டன் போன்ற நகரங்களில் உள்ள சில சிறப்பு கடைகளில் மட்டுமே இது கிடைக்கும். ஒரு கிலோ அல்மாஸ் கேவியரின் விலை முப்பது லட்சம்.

மட்சுடேக் காளான்

இவை உலகில் மிகவும் அரிதாகக் கிடைக்கும் காளான்கள். ஜப்பானின் காடுகளில் இயற்கையாகவே வளர்கின்றன. சரியான காலநிலை, சரியான நேரம் வந்தால் தான் இவை வளரும். இல்லையென்றால் கிடைக்காது. இப்போது ஒரு கிலோ மட்சுடேக் காளானின் விலை மூன்று லட்சம் வரை இருக்கிறது.

யூபாரி கிங் மெலன்

ஜப்பானைச் சேர்ந்த கச்சிதமான வட்ட வடிவமும் மிகுந்த இனிப்பும் கொண்ட இந்த தர்ப்பூசணிகள் 5 முதல் 7 கிலோ வரை எடையிருக்கும். ஒரு தர்பூசணியின் விலை சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்