உடல் சூட்டைக் குறைக்க சில டிப்ஸ்

undefined

இரவில் தூங்கும்போது விளக்கெண்ணெயை உள்ளங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.
இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.
தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.
விளக்கெண்ணெய் மசாஜ் உடலின் மையப்பகுதியில் நிலவும் வெப்பத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.
விளக்கெண்ணெய் இயற்கையான மலமிளக்கியாக செயல்படக்கூடியது.
உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்கி உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.
இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளரில் சிறிதளவு சோம்பை ஊறவைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் அந்த நீரைப் பருக உடல் சூடு குறையும்.
தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் சாப்பிடலாம்.
வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்.
காரமான, பொரித்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இவற்றை தவிர்த்தால் மட்டும் தான் உடல் சூடு குறையும்.
Explore