AI-ஆல் இந்த வேலைகளுக்கு ஆபத்து இல்லை - ஆய்வு செய்து பட்டியலிட்ட Anthropic

இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.கம்ப்யூட்டர் புரோகிராமிங் 75% பணிகள் ஏஐ உதவியுடன் செய்யப்படுகின்றன.
AI-ஆல் இந்த வேலைகளுக்கு ஆபத்து இல்லை - ஆய்வு செய்து பட்டியலிட்ட Anthropic
Published on

செயற்கை நுண்ணறிவு எழுச்சியால் உலகம் முழுவதிலும் தொழில்நுட்ப நிறுவனங்களில் லே ஆப் எனப்படும் பணிநீக்கங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

மனித வேலைகளை மனிதர்களை விட ஏஐ வேகமாக செய்வதாலும் மனிதர்கள் ஏஐ க்கு தகவமைத்துகொள்ளாதபட்சத்திலும் வரும் காலங்களில் வேலையிழப்புகள் அதிகம் இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் முன்னணி ஏஐ நிறுவனங்களில் ஒன்றான அந்திரோபிக் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அந்நிறுவனத்தின் Claude ஏஐ உட்பட ஏஐ கருவிகளை உண்மையில் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் மூலம் ஏஐ எந்த வேலைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்ற தரவுகளை சேகரித்ததன் மூலம் எந்த வேலைகளுக்கு ஏஐ ஆல் ஆபத்து இருக்காது என தெரியவந்துள்ளது. 

இதில் சுமார் 22 வேலைகள் ஏஐ ஆல் பாதிக்கப்படாது என்று ஆந்திரோபிக் பட்டியலிட்டுள்ளது.  

அதன்படி விவசாயம், மீன்பிடித்தல், வனத்துறை, கட்டுமானப் பணிகள், அகழ்வாராய்ச்சி, இயந்திரங்களை நிறுவுதல், பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல், உணவு தயாரித்தல், பரிமாறுதல், கட்டிட பராமரிப்பு, துப்புரவு வேலைகள், போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் ஏஐ தலையீடு இருக்காது. 

மேலும், முடிதிருத்துதல், முதியோர் பராமரிப்பு போன்ற தனிநபர் பராமரிப்பு மற்றும் சேவை, தொழிற்சாலை இயந்திரங்களை இயக்குவது உள்ளிட்ட உற்பத்தித் துறை வேலைகள், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணிகள், வணிக மற்றும் நிதிச் செயல்பாடுகள் ஆகியவற்றை ஏஐ-ஆல் செய்ய முடியாது.

அதேபோல், ஆய்வுப் பணிகள், தீயணைப்பு, காவல், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு சேவைகள், சமூக சேவை, விற்பனை மற்றும் அது சார்ந்த பணிகள், கற்பித்தல், கலை, பொழுதுபோக்கு, ஊடகங்கள் ஆகியவற்றில் நேரடி மனித திறன் சார்ந்த பணிகள் பாதிக்கப்படாது.

இந்த வேலைகள் பெரும்பாலும் உடல் உழைப்பு, மனிதர்களுடனான நேரடித் தொடர்பு மற்றும் இயந்திரங்களால் செய்ய முடியாத நுணுக்கமான வேலைகளை அடிப்படையாகக் கொண்டவை.

சிக்கலான நேரங்களில் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை இயந்திரங்களால் எடுக்க முடிவதில்லை, எனவே நிபுணத்துவம் வாய்ந்த சிறப்புத் தேர்ச்சி தேவைப்படும் வேலைகளுக்கு ஏஐ ஒத்துவராது.

ஆபத்தில் உள்ள துறைகள்:

கம்ப்யூட்டர் புரோகிராமிங் 75% பணிகள் ஏஐ உதவியுடன் செய்யப்படுகின்றன. கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கஸ்டமர் சர்வீஸ் சேவைகள், தானியங்கி மென்பொருட்கள், சாட்பாட்ஸ் மூலம் செய்யப்படுகின்றன.

டேட்டா என்ட்ரி எனப்படும் தரவு உள்ளீடு வேலைகள் ஏஐ ஆல் 67% மேற்கொள்ளப்படுகின்றன. கணினி துறையில் 94% வேலைகளை ஏஐ ஆல் செய்ய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால், கம்ப்யூட்டர் திரைக்கு வெளியே நடக்கும் வேலைகள் இப்போதைக்கு ஏஐ ஆல் பறிக்கப்பட வாய்ப்பில்லை என்கிறது ஆந்த்ரோபிக்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com