

பெங்களூரைச் சேர்ந்த பங்கஜ் என்ற இளைஞர், தனது தாத்தாவின் பழைய டெலிபோனை ஒரு நவீன ஏஐ உதவியாளராக மாற்றியிருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய நவீன ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுடன் பேசுவது சலிப்பை ஏற்படுத்தியதால், 1970-களின் பழைய ரோட்டரி டயல் வகை டெலிபோனை பங்கஜ் மாற்றியமைத்துள்ளார்.
இந்த முழு அமைப்பையும் உருவாக்க அவருக்கு வெறும் ரூ.2,307 மட்டுமே செலவாகியுள்ளது.
போனின் ரிசீவரை எடுத்தவுடன் ஏஐ சிஸ்டம் தயாராகிவிடும். "Hey Kiri" என்ற வார்த்தையைக் கூறினால், அது வேலை செய்யத் தொடங்கும்.
இதன் மூலம் டாக்ஸி புக் செய்வது, மீட்டிங்குகளை திட்டமிடுவது, உணவுகளை ஆர்டர் செய்வது, மின்னஞ்சல்களைச் சுருக்கமாகக் கேட்பது மற்றும் வீட்டின் விளக்குகளைக் கட்டுப்படுத்துவது போன்ற பல வேலைகளைச் செய்ய முடியும்.
பங்கஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்த வீடியோவை பகிர்ந்த நிலையில் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
வெளியே பார்ப்பதற்கு 1970-களின் விண்டேஜ் போன் போல இருந்தாலும், உள்ளே அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் இது செயல்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
i was tired of talking to ugly plastic boxes. so i turned my grandfather's old rotary phone into an ai assistant?i pick it up, say "hey kiri" and just talk like book a cab, schedule a meeting, order me maggi, turn off the lights, summarise my emails literally anything and it… pic.twitter.com/JvX4MOY9T7