எல்லோருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா... ஏர்டெல் மாஸ் அறிவிப்பு..!

போஸ்ட்பெயிட் திட்டங்களில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.ஏர்டெல் நிறுவனம் முதலில் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கியது.
எல்லோருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா... ஏர்டெல் மாஸ் அறிவிப்பு..!
Published on

இந்திய டெலிகம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் தனது போஸ்ட்பெயிட் பயனர்கள் அனைவருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கியுள்ளது. அன்லிமிட்டெட் டேட்டா சலுகை தற்போது அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. கொல்கத்தா வட்டாரத்தில் உள்ள அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.

குறைந்த விலையில் கிடைக்கும் என்ட்ரி லெவல் திட்டம் தொடங்கி விலை உயர்ந்த திட்டம் வரை அனைத்திலும் பயனர்கள் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் திட்டத்தின் அடிப்படை விலை மாதம் ரூ. 449 முதல் தொடங்குகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா திட்டத்தில் பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படும்.

இதேபோன்ற அறிவிப்பை ஏர்டெல் நிறுவனம் முதலில் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கியது. எனினும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களில் மட்டுமே அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் திட்டங்களை பொறுத்தவரை அனைத்து திட்டங்களிலும் பயனர்கள் அன்லிமிட்டெட் டேட்டா பயன்படுத்தலாம். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com