8000mAh பேட்டரி, 45W சார்ஜிங்... மிட் ரேஞ்சில் மிரட்டும் புது ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் 8000mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
8000mAh பேட்டரி, 45W சார்ஜிங்... மிட் ரேஞ்சில் மிரட்டும் புது ஸ்மார்ட்போன்
Published on

டெக்னோ பிரான்டின் முற்றிலும் புதிய POVA Curve 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 3D Curved AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 7100 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைஓஎஸ் 16 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, பெங்காலி, தமிழ், குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளிலும் பயன்படுத்த முடியும். இந்தியாவில் முதல் முறையாக இந்த பிரிவில் ஏஐ நாய்ஸ் ரிடக்ஷன் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை சாதாரண அழைப்புகள், வாட்ஸ்அப் சாட், ஜூம் மீட்டிங் அல்லது கேமிங் என அனைத்து வகை பயன்பாடுகளின் போதும் பயனரின் குரல் தெளிவாக கேட்பதை உறுதி செய்யும்.

ஸ்டார்ஷிப் சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் IP64 தர டஸ்ட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய POVA Curve 2 5ஜி ஸ்மார்ட்போன் 8000mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7.42 மில்லிமீட்டர் அளவில் வெறும் 195 கிராம் எடை கொண்டிருக்கிறது.

டெக்னோ POVA Curve 2 5ஜி ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பர்ப்பில், ஸ்டார்ம் டைட்டானியம் மற்றும் மெல்டிங் சில்வர் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் வருகிற 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி மற்றும் 3/6 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை சலுகையில் ரூ. 3000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com