Poco Phone | பட்ஜெட் விலையில் பயங்கர அம்சங்கள்... புது போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

போக்கோ C85x 5ஜி ஸ்மார்ட்போன் 6300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
Poco Phone | பட்ஜெட் விலையில் பயங்கர அம்சங்கள்... புது போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
Published on

போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போக்கோ C85x 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் HD+ ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் யுனிசாக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டிருக்கிறது.

மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 32MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ C85x 5ஜி ஸ்மார்ட்போன் 6300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அல்லது 1000 முறை சார்ஜிங் செய்த பிறகும் பேட்டரி ஹெல்த் 80 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 7.5 வாட் ரிவர்ஸ்-வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.

போக்கோ C85x 5ஜி அம்சங்கள்:

6.9 இன்ச் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் யுனிசாக் டி8300 6 நானோமீட்டர் பிராசஸர்

Arm மாலி-G57 MC2 GPU

4 ஜி.பி. ரேம்

64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ்.

டூயல் சிம் ஸ்லாட்

32MP பிரைமரி கேமரா, 2-வது லென்ஸ்

8MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக்

எஃப்.எம். ரேடியோ

வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP52)

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்

6300mAh பேட்டரி

15 வாட் சார்ஜிங்

இந்திய சந்தையில் புதிய போக்கோ C85x 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போக்கோ C85x 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com