Nothing | ஆரம்பமே அசத்தலா இருக்கே... அறிமுக ஆஃபரில் விற்பனைக்கு வந்த நத்திங் போன்கள்!

இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா உள்ளது.
Nothing | ஆரம்பமே அசத்தலா இருக்கே... அறிமுக ஆஃபரில் விற்பனைக்கு வந்த நத்திங் போன்கள்!
Published on

நத்திங் நிறுவனத்தின் 4a மற்றும் 4a ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய விற்பனை தொடங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இரு ஸ்மார்ட்போன்களுக்கும் அறிமுக சலுகைகள் வழங்கப்படுகிறது. மிட்-ரேஞ்ச் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நத்திங் 4a சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேம்பட்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப்செட், புதிய க்ளிஃப் லைட்டிங் மேட்ரிக்ஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இதில் நோட்டிஃபிகேஷன் மற்றும் இன்டராக்டிவ் அம்சங்களுக்காக கூடுதல் எல்.இ.டி. வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார் செட்டப், 5400mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் சலுகை விவரங்கள்:

நத்திங் 4a 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 31,999

நத்திங் 4a 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 34,999

நத்திங் 4a 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 37,999

நத்திங் 4a ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 39,999

நத்திங் 4a ப்ரோ 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 42,999

நத்திங் 4a ப்ரோ 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 45,999

நத்திங் 4a ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கிறது. நத்திங் 4a ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், சில்வர் மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளம், ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், க்ரோமா மற்றும் இதர முன்னணி விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

அறிமுக சலுகையாக இன்று (மார்ச் 13) நத்திங் போன் 4a மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 3,000 வரையிலான வங்கி சலுகைகளும், போன் 4a ப்ரோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 4,000 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட விற்பனை தளங்களில் எக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com