விரைவில் இந்தியா வரும் புது ஐபோன்... என்ன மாடல், என்னென்ன அம்சங்கள்..?

புதிய ஐபோன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.பழைய பாரம்பரிய நாட்ச் அகற்றப்படும் என கூறப்படுகிறது.
விரைவில் இந்தியா வரும் புது ஐபோன்... என்ன மாடல், என்னென்ன அம்சங்கள்..?
Published on

ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஐபோன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் 16e மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஐபோன் 17e என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இது நிறுவனத்தின் ஒரு புதிய ஐபோன் ஆக இருக்கலாம். மேலும் இது முந்தைய மாடலைப் போலவே ஒட்டுமொத்தமாக அதே வடிவமைப்பை கொண்டிருக்கும். இருப்பினும், இதில் டைனமிக் ஐலேண்ட் அறிமுகப்படுத்தப்படலாம். இதனால், புதிய சாதனத்திலிருந்து பழைய பாரம்பரிய நாட்ச் அகற்றப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16e மாடலை பிப்ரவரி 19, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடுத்த புதிய ஐபோன் 17e மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

புதிய ஐபோனின் கேமரா பிரிவை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஐபோன் 16e-யில் இருந்த அதே ஒற்றைக் கேமரா அமைப்பே இந்த மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்பிள் இப்போது மாற்றக்கூடிய ஒரு விஷயமாகும். வழக்கமான ஐபோன் 17-ல் 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் உள்ளது. ஆனால் இதை ஸ்கிரீன் ஐபோன் 17e மாடலிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.

ஐபோன் 17e மாடலில் புதிய A19 சிப்செட் வழங்கப்படலாம். ஐபோன் 16e மாடலில் A18 சிப்செட் உள்ளது, இது ஐபோன் 16 சீரிசில் வழங்கப்பட்டு சிப்செட் ஆகும். ஐபோன் 17e மாடலில் புதிய C1X மோடமும் இடம்பெறக்கூடும். முந்தைய ஐபோன் 16e மாடலில் தான் C1 5ஜி மோடம் முதல் முறையாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com