Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 நவம்பர் 2025: ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீதியுலா.திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 நவம்பர் 2025: ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-23 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி காலை 10.25 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 2.41 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

மாயவரம் ஸ்ரீ கவுரிமாயூரநாதர் காலை நாற்காலி மஞ்சத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. இரவு கற்பக விருட்சம் காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் சந்திர பிரபையில் பவனி. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீதியுலா. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வர்த்தியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆதாயம்

ரிஷபம்-சுகம்

மிதுனம்-லாபம்

கடகம்-வரவு

சிம்மம்-பாராட்டு

கன்னி-பண்பு

துலாம்- முயற்சி

விருச்சிகம்-சாந்தம்

தனுசு- தெளிவு

மகரம்-பக்தி

கும்பம்-இன்பம்

மீனம்-உழைப்பு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com