Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 டிசம்பர் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 டிசம்பர் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-23 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி இரவு 8.41 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : பூசம் காலை 8.55 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி புறப்பாடு. திருவாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்த கோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-லாபம்

ரிஷபம்-ஆதரவு

மிதுனம்-முயற்சி

கடகம்-தாமதம்

சிம்மம்-பயணம்

கன்னி-மாற்றம்

துலாம்- பொறுமை

விருச்சிகம்-பரிசு

தனுசு- பாசம்

மகரம்-நன்மை

கும்பம்-வெற்றி

மீனம்-கடமை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com