Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 நவம்பர் 2025: சங்கடஹர சதுர்த்தி

குச்சனூர் ஸ்ரீசனிபகவானுக்கு திருமஞ்சனம்.உப்பூர் ஸ்ரீவெயிலுகாந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 நவம்பர் 2025: சங்கடஹர சதுர்த்தி
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-22 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திருதியை நண்பகல் 12.31 மணி வரை பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம் : மிருகசீரிஷம் பின்னிரவு 3.56 மணி வரை பிறகு திருவாதிரை.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்

இன்று சங்கடஹர சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீசனிபகவானுக்கு திருமஞ்சனம். மயிலாடுதுறை ஸ்ரீகவுரிமாயூரநாதர் வெள்ளிப்பட்டிச் சப்பரத்தில் அருள்மிகு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. வீரவநல்லூர், பத்தமடை கோவில்களில் அம்பாள் வீதி உலா. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீசிலம்பனி விநாயகருக்கு அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாறையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீமாணிக்கவிநாயகர், மதுரை ஸ்ரீமுக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீவெயிலுகாந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால் சுவாமி கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஜெயம்

ரிஷபம்-வரவு

மிதுனம்-நன்மை

கடகம்-தாமதம்

சிம்மம்-நலம்

கன்னி-அன்பு

துலாம்- நட்பு

விருச்சிகம்-புகழ்

தனுசு- ஆதரவு

மகரம்-லாபம்

கும்பம்-மேன்மை

மீனம்-இன்பம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com