

இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-20 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை மாலை 5.43 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : பூரம் காலை 8.23 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் விடாயாற்று உற்சவம். திருவள்ளூர் நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம்.
திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-திடம்
மிதுனம்-ஓய்வு
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-புகழ்
கன்னி-ஊக்கம்
துலாம்- தனம்
விருச்சிகம்-நலம்
தனுசு- வெற்றி
மகரம்-போட்டி
கும்பம்-தெளிவு
மீனம்-லாபம்