Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 டிசம்பர் 2025: திருக்கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதி சொரூபமாய் மகா தீப ஜோதி தரிசனம்.பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 டிசம்பர் 2025: திருக்கார்த்திகை தீபத்திருவிழா
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-17 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி காலை 10.13 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : பரணி மாலை 4.47 மணி வரை பிறகு கார்த்திகை

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரருக்கு இன்று மகாதீப தரிசனம், கார்த்திகை விரதம்

இன்று திருக்கார்த்திகை, திருவண்ணாமலை தீபம். கார்த்திகை விரதம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதி சொரூபமாய் மகா தீப ஜோதி தரிசனம். பழனி ஸ்ரீ ஆண்டவர் தீபோற்சவ காட்சி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-நன்மை

மிதுனம்-சாந்தம்

கடகம்-நலம்

சிம்மம்-லாபம்

கன்னி-வெற்றி

துலாம்- அமைதி

விருச்சிகம்-பொறுமை

தனுசு- தேர்ச்சி

மகரம்-ஊக்கம்

கும்பம்-விவேகம்

மீனம்-மாற்றம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com