Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 நவம்பர் 2025: திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 நவம்பர் 2025: திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-13 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : நவமி மாலை 6.03 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.07 மணி வரை

பிறகு உத்திரட்டாதி

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகன உலா. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. நயினார் கோவில் அன்னை சவுந்தரநாயகி திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பயணம்

ரிஷபம்-நிம்மதி

மிதுனம்-புகழ்

கடகம்-வெற்றி

சிம்மம்-லாபம்

கன்னி-உழைப்பு

துலாம்- உதவி

விருச்சிகம்-நலம்

தனுசு- கண்ணியம்

மகரம்-சுகம்

கும்பம்-இன்பம்

மீனம்-சுபம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com