Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 நவம்பர் 2025: குருபகவானுக்கு திருமஞ்சனம்

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 நவம்பர் 2025:  குருபகவானுக்கு திருமஞ்சனம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-11 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி இரவு 8.03 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.57 மணி வரை பிறகு சதயம்

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சுபமுகூர்த்த தினம், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி

இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலையில் சேஷ வாகனத்தில் பவனி, இரவு சுவாமி கற்பக விருட்சம் அம்பாள் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருப்பரங்குனறம் ஸ்ரீ ஆண்டவர் அன்ன வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும், தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மேன்மை

ரிஷபம்-நலம்

மிதுனம்-நட்பு

கடகம்-வரவு

சிம்மம்-இரக்கம்

கன்னி-சாந்தம்

துலாம்- நன்மை

விருச்சிகம்-அசதி

தனுசு- புகழ்

மகரம்-பெருமை

கும்பம்-விருத்தி

மீனம்-கண்ணியம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com