Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 டிசம்பர் 2025: சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 டிசம்பர் 2025: சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-6 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பிரதமை காலை 9.53 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : பூராடம் மறுநாள் விடியற்காலை 4.07 மணி வரை பிறகுஉத்திராடம்

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

பெருமாள் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அபிஷேகம்

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் ராஜாங்க சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை. சாக்கிய நாயனார் குரு பூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நட்பு

ரிஷபம்-நிறைவு

மிதுனம்-உண்மை

கடகம்-உயர்வு

சிம்மம்-ஆதரவு

கன்னி-கவனம்

துலாம்- சோர்வு

விருச்சிகம்-வாழ்வு

தனுசு- களிப்பு

மகரம்-இன்பம்

கும்பம்-ஆக்கம்

மீனம்-பரிவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com