Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 டிசம்பர் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பட்டாபிஷேகம் தங்கக் குதிரையில் பவனி. திருமயிலை, திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 டிசம்பர் 2025:  முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-16 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி நண்பகல் 12.29 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : அசுவினி இரவு 6.23 மணி வரை பிறகு பரணி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

பிரதோஷம், திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

பிரதோஷம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலை கண்ணாடி விமானத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பட்டாபிஷேகம் தங்கக் குதிரையில் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமயிலை, திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

திருத்தணி, திருப்போரூர், வடபழனி குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமா நிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மாற்றம்

ரிஷபம்-அன்பு

மிதுனம்-பரிசு

கடகம்-ஆதரவு

சிம்மம்-ஊக்கம்

கன்னி-உயர்வு

துலாம்- ஈகை

விருச்சிகம்-அமைதி

தனுசு- ஆதாயம்

மகரம்-புகழ்

கும்பம்-போட்டி

மீனம்-இன்பம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com