Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 டிசம்பர் 2025: சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றல். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 டிசம்பர் 2025: சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-4 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அமாவாசை (முழுவதும்)

நட்சத்திரம் : கேட்டை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு மூலம்

யோகம் : மரண / அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி

சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி. ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று. நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றல். தொண்டரடிப்பொடியாழ்வார், பெரிய நம்பி திருநட்சத்திர வைபவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-கவனம்

ரிஷபம்-பெருமை

மிதுனம்-இன்பம்

கடகம்-ஒற்றுமை

சிம்மம்-வாழ்வு

கன்னி-பரிசு

துலாம்- நன்மை

விருச்சிகம்-சலனம்

தனுசு- உழைப்பு

மகரம்-இன்பம்

கும்பம்-ஆர்வம்

மீனம்-கடமை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com