Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 அக்டோபர் 2025: நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 அக்டோபர் 2025:  நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-29 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : நவமி பிற்பகல் 3.24 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : பூசம் மாலை 5.11 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் வீதியுலா. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை.

விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-உவகை

மிதுனம்-ஈகை

கடகம்-செலவு

சிம்மம்-நற்செயல்

கன்னி-அமைதி

துலாம்- மாற்றம்

விருச்சிகம்-புகழ்

தனுசு- உதவி

மகரம்-வெற்றி

கும்பம்-சுகம்

மீனம்-ஆதரவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com