Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 நவம்பர் 2025: கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கல்யாணம்

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு அபிஷேகம்திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சனம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 நவம்பர் 2025: கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கல்யாணம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-29 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி நாளை விடியற்காலை 5.39 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : உத்திரம் பின்னிரவு 3.07 மணி வரை பிறகு அஸ்தம்

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம், திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு அபிஷேகம்

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு அபிஷேகம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரக தாம்பிகை தென்காசி சங்கரநயினார் கோவில், பத்தமடை கோவில்களில் ஸ்ரீ அம்பாள் திருக்கல்யாணம். கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கல்யாணம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் விருஷப சேவை, கம்பை ஆற்றில் கதிர் குளித்தல், இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம். மாயவரம் ஸ்ரீ கவுரீமாயூரநதர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. ரதாரோகணம் திருத்தேர் வடம் பிடித்தல். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் காலை வெண்ணைத்தாழி சேவை. இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-உறுதி

மிதுனம்-திடம்

கடகம்-திறமை

சிம்மம்-சிறப்பு

கன்னி-தனம்

துலாம்- வெற்றி

விருச்சிகம்-இன்பம்

தனுசு- நிறைவு

மகரம்-ஜெயம்

கும்பம்-நேர்மை

மீனம்-ஈகை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com