Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 பிப்ரவரி 2026: தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம்

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீஆதிநாதவல்லி கோவிலில் காலையில் அலங்கார திருமஞ்சன சேவை.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 பிப்ரவரி 2026: தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு தை-29 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி நண்பகல் 1.20 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : கேட்டை பிற்பகல் 2.40 மணி வரை பிறகு மூலம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சனம், தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குரு பகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திரு மெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஆதிநாதன் பொலிந்து நின்ற திருக்கோலம். ஸ்ரீஆதிநாதவல்லி கோவிலில் காலையில் அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-தாமதம்

ரிஷபம்-களிப்பு

மிதுனம்-உழைப்பு

கடகம்-மகிழ்ச்சி

சிம்மம்-விவேகம்

கன்னி-நேர்மை

துலாம்- லாபம்

விருச்சிகம்-உற்சாகம்

தனுசு- நற்சொல்

மகரம்-நன்மை

கும்பம்-அமைதி

மீனம்-போட்டி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com