Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 மார்ச் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம்

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 மார்ச் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மாசி-26 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி பின்னிரவு 2.02 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : அனுஷம் இரவு 7.16 மணி வரை பிறகு கேட்டை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

வடபழனி, திருத்தணி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய கோவிலான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நலம்

ரிஷபம்-நன்மை

மிதுனம்-நற்செயல்

கடகம்-தாமதம்

சிம்மம்-ஆர்வம்

கன்னி-சாந்தம்

துலாம்- வரவு

விருச்சிகம்-உழைப்பு

தனுசு- வெற்றி

மகரம்-இன்பம்

கும்பம்-விவேகம்

மீனம்-இரக்கம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com