இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 ஆகஸ்ட் 2025: பிரதோஷம், சுபமுகூர்த்த தினம்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 ஆகஸ்ட் 2025: பிரதோஷம், சுபமுகூர்த்த தினம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-4 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி பிற்பகல் 3.03 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : புனர்பூசம் பின்னிரவு 2.06 மணி வரை பிறகு பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய சுபமுகூர்த்த தினம், பிரதோஷம் சிவன் கோவில்களில் அபிஷேகம்

இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் உருகு சட்டச் சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவ திருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், திருசாவூர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பெருமை

ரிஷபம்-வரவு

மிதுனம்-செலவு

கடகம்-நிறைவு

சிம்மம்-தெளிவு

கன்னி-மேன்மை

துலாம்- மாற்றம்

விருச்சிகம்-களிப்பு

தனுசு- உறுதி

மகரம்-பயணம்

கும்பம்-திடம்

மீனம்-கண்ணியம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com