இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 12 ஆகஸ்ட் 2025

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 12 ஆகஸ்ட் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆடி-27 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திருதியை காலை 10.35 மணி வரை. பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : பூரட்டாதி பிற்பகல் 2.20 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

யோகம் : மரண, அமிர்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, வடபழனி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் அபிஷேகம்

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீமுத்து மாலையம்மன் பவனி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப்பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீமாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீமுக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீவெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம் வழிபாடு.

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீசித்தநாதீஸ்வர் கோவலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தெனான்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-இன்பம்

ரிஷபம்-இரக்கம்

மிதுனம்-மகிழ்ச்சி

கடகம்-சாந்தம்

சிம்மம்-உண்மை

கன்னி-உவகை

துலாம்- அனுகூலம்

விருச்சிகம்-நன்மை

தனுசு- சுகம்

மகரம்-செலவு

கும்பம்-லாபம்

மீனம்-நிறைவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com