திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6-ந் தேதி நடக்கிறது!

மார்ச் 6 காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார் சனிபகவான்.சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6-ந் தேதி நடக்கிறது!
Published on

திருநள்ளாறு கோவிலில் மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் சனிப் பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். மார்ச் 6-ந் தேதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

அதன்படி திருநள்ளாறு கோவிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

இதனையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கொடி மரத்து விநாயகர் மற்றும் பந்தக்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மங்கலவாத்தியங்கள் முழங்க பந்தக்கால்கள் பிரகார உலாவாக கொண்டு வரப்பட்டு கோவில் உள் பிரகாரத்தில் பைரவர் சன்னதி மற்றும் ராஜ கோபுரம் அருகில் நடப்பட்டது.

இதில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ. ராஜ சேகரன், கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com