சிறப்புகள் நிறைந்த மாசி மாதம்

மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் குல சேகர ஆழ்வார் அவதரித்தார்.மாசி மகம் என்பது அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துகிறது.
சிறப்புகள் நிறைந்த மாசி மாதம்
Published on

மாசி மாதம் என்பது இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட சிறப்பான மாதம் என்று சொல்வார்கள். ஆனால் மாசி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்றதாகும்.

* மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வதும், மந்திர உபதேசம் செய்வதும் சிறப்பு.

* மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்திரமே 'மாசி மகம்' என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தீர்த்தங்களுடன் அமைந்த ஆலயங்களில் தெப்ப உற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

*12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் 'மாசி மகாமகம்' மாசி மாதத்தில்தான் நடைபெறுகிறது.

* மாசி மாதம் வரும் சங்கடகர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் எல்லாவித தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.

* மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் குல சேகர ஆழ்வார் அவதரித்தார்.

* மாசி மகம் என்பது அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துகிறது. எனவே மாசி மாதத்தில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்வது விசேஷம்.

* உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மகம் அன்று அவற்றை தொடங்கினால் அந்தந்த துறையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

* மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வில் இன்பமும், வெற்றியும் கிடைக்கும்.

* மாசி மாதம் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால் பெருமாளின் அருளை பெறலாம்.

* பொதுவாக அமாவாசை நாளில்தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சொல்வார்கள். ஆனால் மாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலனை தரும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com