சந்திர கிரகணத்தில் கிரிவலம்... இருமடங்கு பலன் தரும்

நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது.சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைப்பது வழக்கம்.
சந்திர கிரகணத்தில் கிரிவலம்... இருமடங்கு பலன் தரும்
Published on

மாசி மாத பவுணர்மியையொட்டி நாளை திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.52 மணி வரையில் உள்ள நிலையில் நாளை மாலை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.

சந்திர கிரகணம் சமயத்தில் கிரிவலம் செல்லலாமா? என்பது குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் பி.டி.ரமேஷ் குருக்கள் கூறுகையில், சந்திர கிரணத்தின் போது கிரிவலம் செல்லலாம். கிரகணம் சமயத்தில் கிரிவலம் சென்றால் இருமடங்கு பலன் தரும்.

கர்ப்பிணிகள் மட்டும் கிரகணம் சமயத்தில் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும். கிரகணம் என்பது மனிதனுக்கு மட்டுமே. சாமிக்கு கிடையாது. தேவர்கள் கிரகணம் சமயத்தில் தவம் செய்வார்கள். அந்த சமயத்தில் தவம் செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே நதிகள், தீர்த்த குளங்களின் கரையில் தவம் செய்யலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com