Navratri Special: நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்: 5- நாள் இன்று..!

முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
Navratri Special: நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்: 5- நாள் இன்று..!
Published on

நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.

ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஐந்தாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

ஐந்தாம் நாள் போற்றி

ஓம் வீரசக்தியே போற்றி

ஓம் திரிசூலியே போற்றி

ஓம் கபாலியே போற்றி

ஓம் தாளிசினியே போற்றி

ஓம் கவுரி தேவியே போற்றி

ஓம் உத்தமத் தாயே போற்றி

ஓம் தர்மம் காப்பவளே போற்றி

ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி

ஓம் மெய்ஞான விதியே போற்றி

ஓம் தாண்டவத் தாரகையே போற்றி

ஓம் போற்றுவோர் துணையே போற்றி

ஓம் பச்சைக் காளியே போற்றி

ஓம் பவள நிறத்தினாய் போற்றி

ஓம் ஆகாய ஒளியே போற்றி

ஓம் பூதங்கள் உடையோய் போற்றி

ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com