நீங்கள்தான் ஆஸ்திரேலியாவின் ஹீரோ: பயங்கரவாதியை மடக்கியவரை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்

சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிறு அன்று துப்பாக்கிச்சூடு நடந்தது.இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நீங்கள்தான் ஆஸ்திரேலியாவின் ஹீரோ: பயங்கரவாதியை மடக்கியவரை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.

அந்தக் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலியாகினர்.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அகமது (40), என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அகமதுவை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதுதொடர்பாக, அல்பானீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அகமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்களின் சார்பாகவும் நன்றி கூறுகிறேன் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com