என்ன தான் ஆச்சு இம்ரான்கானுக்கு? சிறை வாசலில் சகோதரிகள் திடீர் போராட்டம்

இம்ரான்கான் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 வாரமாக இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
என்ன தான் ஆச்சு இம்ரான்கானுக்கு? சிறை வாசலில் சகோதரிகள் திடீர் போராட்டம்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கடந்த 3 வாரமாக இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகள் மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி நிர்வாகிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.

இந்நிலையில் இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் நேற்று அடியாலா சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.

தகவலறிந்து ஏராளமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com