'போர் அண்டை நாடுகளுடன் கிடையாது... தனிமைப்படுத்தப்படுதல் வட்டம் விரிவடையும்முன்' - ஈரானுக்கு யுஏஇ அறிவுரை

ஈரான் அறிவுப்பூர்வமான பாதைக்குத் திரும்ப வேண்டும்அண்டை நாடுகளுடன் பகுத்தறிவோடும், பொறுப்புணர்வோடும் பழக வேண்டும்
'போர் அண்டை நாடுகளுடன் கிடையாது... தனிமைப்படுத்தப்படுதல் வட்டம் விரிவடையும்முன்' - ஈரானுக்கு யுஏஇ அறிவுரை
Published on

ஈரான் தனது அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபடாமல் புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார். மேலும், "வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் இந்த வன்முறை செயல் ஒரு தவறான கணக்கீடு ஆகும். இது ஒரு இக்கட்டான தருணத்தில் ஈரானைத் தனிமைப்படுத்தியுள்ளது. உங்கள் போர் உங்கள் அண்டை நாடுகளுடன் கிடையாது" என ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷும் தெரிவித்துள்ளார்.

"தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் மோதல்கள் தீவிரமடைதல் எனும் வட்டம் மேலும் விரிவடைவதற்கு முன்பாக, ஈரான் அறிவுப்பூர்வமான பாதைக்குத் திரும்ப வேண்டும்; தனது அண்டை நாடுகளுடன் பகுத்தறிவோடும், பொறுப்புணர்வோடும் பழக வேண்டும்." எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க தங்களுக்கு முழுமையான மற்றும் நியாயமான உரிமை உள்ளதாக அமீரகம் எச்சரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா நாடுகள்மீது ஈரான் குறிவைத்ததை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த கருத்துகளும், கண்டனங்களும் வந்துள்ளன.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com