ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறை- உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு

வன்முறையில் ஐ.நா அமைப்பை சேர்ந்த வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்திருந்தனர்.1 லட்சம் பொதுமக்கள் வெளியேறி அண்டை நகரங்களுக்குள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறை- உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு
Published on

கின்சாசா:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். போலீசார் மற்றும் கிளர்ச்சியளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஐ.நா அமைப்பை சேர்ந்த வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்திருந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் வன்முறை தொடர்ந்து வரும்நிலையில் அப்பகுதியில் உள்ள 1 லட்சம் பொதுமக்கள் வெளியேறி அண்டை நகரங்களுக்குள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இந்தநிலையில் வன்முறையில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com