Iran War | யு.எல்.எஸ். ஆபிரகாம் லிங்கன்: அமெரிக்க மிகப்பெரிய போர்க்கப்பலை ஈரான் தாக்கியதா?

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்து உள்ளது. ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் ஆபிரகாம் லிங்கன் அருகில்கூட வரவில்லை.
Iran War | யு.எல்.எஸ். ஆபிரகாம் லிங்கன்: அமெரிக்க மிகப்பெரிய போர்க்கப்பலை ஈரான் தாக்கியதா?
Published on

ஈரான் மீதான போரில் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பலான யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

ஓமன் கடற்பரப்பில் இருந்த ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இயங்க முடியாத வகையில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

ஆனால் அதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது. ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலின் புகைப்படத்தை வெளியிட்டு, 'ஆபரேஷன் எபிக் ப்யூரி ராணுவ நடவடிக்கைக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்து உள்ளது.

மேலும், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் ஆபிரகாம் லிங்கன் அருகில்கூட வரவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com