பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் - பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா

இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் - பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா
Published on

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் வர்த்தகத்திலும் பாகிஸ்தானின் ஈடுபாட்டை அமெரிக்கா மிகவும் பாராட்டுகிறது. கனிமங்கள், ஹைட்ரோகார்பன் போன்ற துறைகளில் இருநாடுகளின் புதிய ஒத்துழைப்பின் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்க அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு 50% வரிவித்துள்ள அமெரிக்கா பாகிஸ்தானிடம் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com