லெபனானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுங்கள்..! அமெரிக்கா அறிவுறுத்தல்

இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
லெபனானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுங்கள்..! அமெரிக்கா அறிவுறுத்தல்
Published on

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்நாடு முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்தது. இந்த தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால, லெபனானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com