டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா

மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா
Published on

கீவ்:

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் பெரிய நகரமாக சுமியில் ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பானது சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல் உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில், ரஷிய டிரோன்கள் ஒரு மருத்துவமனை மற்றும் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை சேதப்படுத்தியதாக பிராந்தியத் தலைவர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் இரவு நேரங்களில் ரஷியா ஏவிய 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக விமானப்படை தெரிவித்துள்ளது, இவை பொதுவான இரவு நேரத் தாக்குதல்கள். பெரும்பாலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com