ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்: உறுதி செய்த பிரிட்டன்

அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்தன.அவரது உயிரிழப்புக்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி குற்றம் சாட்டினார்.
ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்: உறுதி செய்த பிரிட்டன்
Published on

லண்டன்:

ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013-ல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021 முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே, அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது. ஏற்கனவே,

உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அவரது உயிரிழப்புக்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ரஷியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் உறுதிசெய்தன.

இந்த நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அவரது உடலில் எபிபாட்டடின் (Epibatidine) என்ற விஷம் இருந்ததை இந்த நாடுகள் உறுதி செய்தன. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு தவளை இனத்துக்குள்ள விஷம் என இந்த நாடுகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சட்ட விதிகளைப் புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளது எனக்கூறிய இந்த நாடுகள், ரசாயன ஆயுத பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா மீது இந்த நாடுகள் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com