நாளை அதிபர் பதவியேற்கும் டிரம்ப்.. இந்தியா, சீனாவுக்கு விரைவில் விஜயம்!

47வது அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கிறார்.சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாளை அதிபர் பதவியேற்கும் டிரம்ப்.. இந்தியா, சீனாவுக்கு விரைவில் விஜயம்!
Published on

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கிறார். குடியேற்றங்கள், மற்ற நாடுகளுடனான வரிக் கொள்கைகள் உள்ளிட்டவற்றில் டிரம்ப் கடுமை காட்டி வருகிறார்.

47வது அமெரிக்க அதிபராகும் டிரம்ப்பின் அடுத்த 5 ஆண்டு பதவிக்காலம் பலருக்கு சோதனைக் காலமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பதவியேற்று 100 நாட்களுக்குள் டிரம்ப் சீனா மற்றும் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2016-20 பதவிக்காலத்தில் எந்த அமெரிக்க அதிபரும் நுழையாத வட கொரியாவுக்கே டிரம்ப் விஜயம் செய்திருந்தார். ரஷியாவுடன் இணக்கமான போக்கை கையாண்டார். அந்த வகையில் இந்த 2025-29 பதவிக்காலத்திலும் டிரம்ப் உலக அரசியலில் தாக்கம் செலுத்துவார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில் டொனால்டு டிரம்ப், தான் பதவியேற்ற பிறகு, சீனாவுக்குச் செல்ல விரும்புவதாக ஆலோசகர்களிடம் தெரிவித்திருக்கிறார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறி வரும் சூழலில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்குடனான உறவை வலுப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என்றும் அவருடன் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க உள்ளார் என்றும் வால் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. ஒரு நாள் முன்னதாக டிரம்ப் ஜி ஜின்பிங்குடன் டெலிபோனில் உரையாடியதை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது.

தொடர்ந்து டிரம்ப் இந்தியாவுக்குச் செல்லக்கூடிய சாத்தியம் குறித்து ஆலோசகர்களுடன் பேசியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர் என்று வால் ஸ்ட்ரீட் குறிப்பிடுகிறது

தகவலின்படி, கடந்த மாதம் கிறிஸ்துமஸை ஒட்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசிக்கு வருகை தந்தபோது பேச்சுவார்த்தைகள் நடித்துள்ளன.

டிரம்பின் இந்தியா வருகை இந்த வருடம் ஏப்ரல் தொடக்கத்தில் அல்லது ஆண்டின் பிற்பகுதியில் இருக்கலாம் என்று வால் ஸ்ட்ரீட் அறிக்கை கூறுகிறது. இந்த வசந்த காலத்தில் வெள்ளை மாளிகை கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் அழைக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com