வெனிசுலாவில் எந்த விமானமும் பறக்கக் கூடாது - அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார் கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது
வெனிசுலாவில் எந்த விமானமும் பறக்கக் கூடாது -  அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
Published on

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.

இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன.

இந்நிலையில், வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கவனத்தில் கொள்ளவும்" என்று சரிகை விடுத்துள்ளார்.

டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு 'காலனித்துவ அச்சுறுத்தல்' என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com