இணைபிரியா ஜோடி.. வாஷிங்டனில் டைடானிக் பாணியில் டிரம்ப் - எப்ஸ்டீன் சிலை திறப்பு | Epstein files

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, சிசுக் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது உள்ளன. எப்ஸ்டீன் உடன் டிரம்ப் நெருக்கமாக, பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
இணைபிரியா ஜோடி.. வாஷிங்டனில் டைடானிக் பாணியில் டிரம்ப் - எப்ஸ்டீன் சிலை திறப்பு  | Epstein files
Published on

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

எபிஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார்.

அவை எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் இடம்பெற்றுள்ளது. 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, சிசுக் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும், எப்ஸ்டீன் உடன் டிரம்ப் நெருக்கமாக, பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சூழலில் அமெரிக்க தலைநகரான வாஷிங்கடன் டிசியில் உள்ள நேஷனல் மால் என்ற வணிக வளாகத்தில் எப்ஸ்டீன் உடன் டிரம்ப் இருக்கும் சிலை திறக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் படத்தில் ஆருயிர் காதலர்களாக ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முகப்பில் கைநீட்டி நிற்கும் காட்சி உலகப் பிரசித்தம். அதேபோல எப்ஸ்டீன் - டிரம்ப் நிற்பதுபோல இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சீக்ரெட் ஹேண்ட்ஷேக் என்ற கலை அமைப்பு இந்த சிலையை நிறுவியுள்ளது. டிரம்ப்புக்கு எதிரான போராட்ட வடிவமாக இந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக நேஷனல் மாலில் எப்ஸ்டீனும் டிரம்ப்பும் கைகோர்த்து நிற்கும் சிலை நிறுவப்பட்டு பின் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com