மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்வோருக்கு தடை - டிரம்ப் தடாலடி

ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது. அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.
மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்வோருக்கு தடை - டிரம்ப் தடாலடி
Published on

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் ஆப்கானிஸ்தான் இளைஞர் நேற்று முன் தினம் நடத்திய துபாஷிச்சூட்டில் 2 காவல்படை வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் இரு பெண் வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய மிருகம் பெரிய விலையை கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும் ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது.

தாக்குதல் நடத்திய இளைஞர் கடந்த ஜோ பைடன் ஆட்சியில் 2021 இல் சரியான பரிசோதனை இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்ப அவகாசம் கிடைக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் சமூக வலைதள பதிவில், முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மில்லியன் கணக்கானோரை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததை தான் ரிவர்ஸ் செய்ய போவதாக தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு பயன்படாதோரும், அமெரிக்காவை நேசிக்க முடியாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என சூளுரைத்துள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள், தொழில்வளர்ச்சி பெற்ற ஜனநாயகங்கள் முதல் உலக நாடுகள், சோவியத் யூனியன்(ரஷியா), சீனாவை சார்ந்த நாடுகள் இரண்டாம் உலக நாடுகள், இந்த இரண்டு அணியிலும் இல்லாத, வளர்ந்து வரும் அல்லது பின்தங்கிய ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்டுகின்றன.

தற்போதைய மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர், காங்கோ, கியூபா, எரித்திரியா, ஹெய்டி, வெனிசுலா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட சில நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com