சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
Published on

சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்குறிவைத்து அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 13-ம் தேதி ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

இந்தத் தாக்குதல்கள் சிரியாவின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது அல்லது இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற  விவரங்களை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை.

இருப்பினும், பயங்கரவாத மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com