அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு ரூ.260 கோடி இழப்பீடு... என்னக் காரணம்?

வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ் டேவ், துறையிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.20 மில்லியன் டாலர் தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும்
அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு ரூ.260 கோடி இழப்பீடு... என்னக் காரணம்?
Published on

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு 29 மில்லியன் டாலர் (ரூ.260 கோடி) இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஜான்வி கண்டுலா, சியாட்டில் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இச்சூழலில் கடந்த 2023 ஜனவரியில் சாலையைக் கடக்க முயலும்போது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதி அவர் உயிரிழந்தார்.

ஒரு இடத்தில் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாக புகார் வந்ததாகவும், அதற்காக அதிகாரிகள்  சென்றுகொண்டிருந்ததாகவும், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி கெவின் டேவ், மணிக்கு 40 கி.மீ வேகம் செல்ல வேண்டிய இடத்தில் சுமார் 119 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தில் அவசரக்கால எச்சரிக்கை விளக்குகள் (Emergency lights) ஒளிரவிடப்பட்டிருந்தாலும், எச்சரிக்கை ஒலி சந்திப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே ஜான்வியின் மரணம் குறித்து மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆட்ரர் கேலியாகப் பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் இந்த விவகாரத்தில் நீதி கேட்டு இந்திய அரசும் முறையிட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறை தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த ஆடெரர், பணியில் இருந்து நீக்கப்பட்டார். கந்துலாவை மோதிய வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ் டேவ், துறையிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும்  கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கெவின் டேவுக்கு $5,000 (ரூ.4.50 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஜான்வியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், தற்போது இந்த மிகப்பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இதில் சுமார் 20 மில்லியன் டாலர் தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கிங் கவுண்டி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com