தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஆசிரியர்கள், மாணவர்களை பணயக்கைதிகளாக்கிய 18 வயது இளைஞன்

துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான்.
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஆசிரியர்கள், மாணவர்களை பணயக்கைதிகளாக்கிய 18 வயது இளைஞன்
Published on

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பள்ளியில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த இளைஞன் பள்ளிக்குள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தான்.

தகவலறிந்து விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பெற்றோர்கள் பள்ளியின் முன் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இறுதியில் அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான். அவனை கைது செய்த போலீசார் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த பள்ளி தாளாளர் மற்றும் 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்த பள்ளிக்குள் நுழைவதற்கு முன் அந்த இளைஞன் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞன் தனது தங்கையை கண்டித்த ஆசிரியரை தேடி அங்கு வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com