வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும்- அதிபர் டிரம்பின் ஆலோசகர் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும்- அதிபர் டிரம்பின் ஆலோசகர் தகவல்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.

அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதற்கிடையே வரி விதிப்பு நடவடிக்கையில் சலுகை அளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்பு வருகிற 9-ந்தேதி அமலுக்கு வர உள்ள நிலையில் இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதால் இவ்விவகாரத்தில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளனர் என்றும் அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறும்போது, இந்தியா, வியட்நாம், இஸ்ரேலுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக டிரம்ப் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டோலாமுடன் மிகவும் பயனுள்ள ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினேன்.

அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முடிந்தால், வியட்நாம் தங்கள் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறது என்று அவர் என்னிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார். வியட்நாம் மீது 46 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா ஏப்ரல் 10-ந்தேதி முதல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34 சதவீத வரியை விதித்துள்ளது.

இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, சீனா தவறாக விளையாடியது. அவர்கள் பீதியடைந்தார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com