சுவீடனில் மின்சார வயர்களை சேதப்படுத்திய கப்பல் பறிமுதல்

ரஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு குற்றம்சாட்டியது. கடற்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது.
சுவீடனில் மின்சார வயர்களை சேதப்படுத்திய கப்பல் பறிமுதல்
Published on

ஸ்டாக்ஹோம்:

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ கடலுக்கு அடியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வயர்களை பொருத்தி வருகிறது. அதன்படி பால்டிக் கடற்பகுதி வழியாக ஐரோப்பிய நாடான லாட்வியாவுக்கு மின்சார வயர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த வயர்களை மர்ம கும்பல் சேதப்படுத்தியது.

இதில் ரஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு குற்றம்சாட்டியது. எனவே பால்டிக் கடற்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. அப்போது பால்டிக் கடற்பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற ஒரு கப்பலை சுவீடன் கடலோர போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் பின்லாந்து-எஸ்டோனியா இடையே செல்லும் மின்சார வயர்களை கடந்த மாதம் ரஷிய கப்பல் சேதப்படுத்தியதாக பின்லாந்து குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com