இந்தியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஈரான் தூதர் உறுதி

மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஈரான் தூதர் உறுதி
Published on

தெஹ்ரான்:

ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள், வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.

ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, மத்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ஈரானுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இந்நிலையில், இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் நலன்களின் பாதுகாப்புக்கு, ஈரான் அரசு என்ன வகையான உத்தரவாதம் வழங்க முடியும் என ஈரானிய தூதர் முகமது பதாலியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த முகமது பதாலி, ஈரானில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்திய குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com